கர்ப்பப்பை பிரச்சனை குறித்து பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்.
கர்ப்பப்பை இறக்கம் என்பது உலகம் முழுவதும் உள்ள பல பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. கிட்டத்தட்ட 20 சதவீதம் பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் என்கிற பிரச்சனை இருக்கிறது. கர்ப்பப்பை இறக்கத்தால் பெண்களுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படலாம். மலக்குடல் இறக்கத்தால் மலச்சிக்கல் ஏற்படலாம். நம்முடைய உடலை ஆரோக்கியமாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதிகமான இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் கடுமையாக இருக்கும். அவர்கள் இன்ஹேலர் பயன்படுத்துவது நல்லது. அதிகமாக பளு தூக்குவதும் தவறு. இதை குணப்படுத்த அறுவை சிகிச்சை முறைகளும் இருக்கின்றன.
யாருக்கெல்லாம் கர்ப்பப்பையினால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்வது சாலச் சிறந்தது. மிகவும் வயதானவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத மற்ற சிகிச்சை முறைகளின் மூலம் சிகிச்சை வழங்கலாம். இந்தியாவில் அதிகமானோருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறது. ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுக்கு ஏற்ற தீர்வு நிச்சயம் இருக்கிறது. அதை வைத்து அவர்களுடைய பிரச்சனைகளை நாம் சரிசெய்யலாம்.