Skip to main content

இன்றைய ராசிபலன் - 28.02.2018

Published on 28/02/2018 | Edited on 28/02/2018

இன்றைய ராசிப்பலன் - 28.02.2018
கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001


28-02-2018, மாசி 16, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 11.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 01.44 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்-1. நடராஜர் அபிஷேகம். லஷ்மிநரசிம்மருக்கு உகந்த நாள். கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00.

meshamமேஷம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும்.  உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

reshabamரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.

3மிதுனம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

kadagamகடகம்

இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சனைகள் தீரும்.

5சிம்மம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

kannirasiகன்னி

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

thulamதுலாம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சி உண்டாகும்.

viruchagamவிருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம்.

danushதனுசு

இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

magaramமகரம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.  தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

kumbamகும்பம்

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

meenamமீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

Next Story

சிறப்பான கல்வி யோகம் யாருக்கு?

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

படித்தவர்கள் இரண்டு கண்களை உடையவராகவும், படிக் காதவர் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும், அது புண்களுக்குச் சமமாகும் என்பது வள்ளுவரின் வாக்கு. ஒருவர் கற்கும் கல்வியானது அவரது ஏழு தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் செல்வமாகும். எல்லாச் செல்வங்களையும் ஒருவர் இழந்தாலும், அவர் கற்ற கல்வியினால் எந்த ஊருக்கு, நாட்டிற்குச் சென்றாலும் பிழைத்துக்கொள்ள முடியும். நாம் கற்றதைப் பிறருக்கு சொல்லிக் கொடுக்கக்கொடுக்க நமக்கும் அறிவுத்திறன் உயரும். மற்றவர்களும் பயனடைவார்கள். அத னால்தான் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புடையதாகிறது. நாம் கற்ற கல்வியை பிறரால் களவாட முடியாது. படிப்பதால் உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்லது- கெட்டது எது என ஆராய்ந்து செயல்பட முடிகிறது. யாரிடம் எப்படிப் பழக- பேசவேண்டும் என்ற பண்பாடு வளர்கிறது. பிறருக்கு உதவிசெய்யும் மனப்பான்மை உண்டா கிறது.

அள்ள அள்ளக்குறையாத அமுதகரபியான கல்வியோகம் உண்டாக ஜோதிடரீதியாக ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரகநிலைகளே காரண மாகின்றன. அதிலும் குறிப்பாக 4-ஆம் பாவம் கல்விக்குரிய ஸ்தானமாகும். இந்த பாவத்தில் கிரகங்கள் பலமாக அமைந்து, சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால், அவரின் கல்வித் தகுதியானது மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகும். 4-ஆம் பாவம் கெட்டு பலவீனமடைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் கல்விச் செல்வத்தை அனுபவிக்கவே முடியாமல் போய்விடும்.

 

god



நான்காம் பாவமானது கல்விச் செல்வத்தைப் பற்றியும், நல்ல அறிவாற்றல், அனுபவ அறிவு பற்றியும் குறிப்பிடுவதாகும். குறிப்பாக பேச்சுவண்மை, ஞாபகசக்தி, மூளையின் செயல்பாடு, கல்வியில் சாதிக்க வேண்டுமென்ற வெறி போன்றவற்றைப் பற்றியும் 4-ஆம் பாவத்தைக் கொண்டு அறியலாம். நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகனா வார். இவர், ஒருவரின் மனநிலையும், மனவலிமையும் எந்த நிலையில் இருக்குமென அறிவிக்கும் கிரகமாவார். புதன் கல்வி காரகனாவார். இவர் ஞாபகசக்தி, புத்தி சாலிலித்தனம், கல்விகற்கும் திறன் பற்றிக் குறிப் பிடும் கிரகமாவார். குரு, நல்ல பேச்சாற்றல், அறிவாற்றல், புத்திசாலிலித்தனம், படிப்பறிவு போன்றவற்றுக் காரகனாவார்.

ஒருவருக்குக் கல்விச் செல்வம் சிறப் பாக அமைய ஜனன ஜாதகத்தில் 4-ஆம் பாவமும், சந்திரன், குரு, புதன் போன்ற கிரகங்களும் பலமாக அமைந்திருப்பது நல்லது. 4-ஆம் பாவம் பலம்பெறுவது மட்டுமின்றி அடிப்படைக் கல்வியைக் குறிக்கும் 2-ஆம் பாவமும் பலம்பெறுவது நல்லது. கற்ற கல்வியைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற 5-ஆம் பாவமும் பலம்பெறுதல் அவசியம். ஆகவே 2, 4, 5-ஆம் பாவங்கள் பலம்பெற்று அமைந்துவிட்டால், சரஸ்வதி தேவி கதவைத்தட்டி கல்விச் செல்வத்தை வாரி வழங்குவாள். அதன்மூலம் வாழ்வில் வளம்பெறமுடியும்.

 

god



4-ஆம் அதிபதியும், புதனும் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது, சுபகிரகச் சேர்க்கை, பார்வை பெற்றிருப்பது மூலமாக கல்விச் செல்வம் சிறப்பாக அமையும். 4-ல் அமையக்கூடிய கிரக அமைப்பைக் கொண்டு ஒருவருக்கு எந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் என்பதை அறியலாம். கல்விகாரகன் புதன் 4-ஆம் வீட்டில் பலமாக அமையப்பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், ஆடிட்டிங் தொடர்புடைய கல்வியில் யோகம் உண்டாகும். புதன், சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் கம்ப்யூட்டர் துறையில் சாதனை செய்யும் வாய்ப்பு, அந்தத் துறையில் பொறியாளராகும் யோகம் உண்டாகும்.


செவ்வாய் 4-ஆம் வீட்டில் பலமாக இருந்தால் நிர்வாகத் தொடர்புடைய கல்வி- குறிப்பாக பி.பி.ஏ., எம்.பி.ஏ., தொடர்புடைய கல்வியில் ஏற்றம் உண்டாகும். கல்வித் தகுதியின் காரணமாக அரசுத்துறையில் பணியாற்றக்கூடிய யோகம் அமையும். சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் 4-ஆம் வீட்டில் இணைந்திருந்தால் பொறியியல் துறையில் பொறியாளராகக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக அமையப் பெற்றவர்கள் மருத்துவத் துறையில் சாதனை செய்வார்கள். சூரியன், செவ்வாயுடன் சந்திரன் அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் கண்டிப்பாக மருத்துவத்துறையில் சாதனை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

புதன், குரு போன்ற சுபர் சேர்க்கைப் பெற்றால் பேச்சால், வாக்கால் மேன்மை கிடைக்கும். ஆசிரியர் பணி, பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய யோகம், வழக்கறிஞராகும் வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசக ராக விளங்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு அதிபலம் பெற்றால் வங்கிப் பணி சார்ந்த கல்வி யோகம் உண்டாகும். குரு, புதனுடன் சந்திரன் சேர்க்கைப் பெறுகின்றபோது ஒருவர் எழுத்துத்துறை, பத்திரிகைத்துறையில் சாதனை செய்யும் யோகம், நல்ல கற்பனை வளம், கதை, கவிதைகள் எழுதக்கூடிய ஆற்றல் உண்டாகும். 4-ஆம் வீட்டில் சந்திரன் பலம்பெறுகின்றபோது கேட்டரிங் கல்வி, கடல் சார்ந்த கல்வி உண்டாகும். சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தால் கலை, இசை, சங்கீதம், பாட்டு தொடர்புடையவற்றில் ஈடுபாடு உண்டாகும். சுக்கிரன் பலம்பெற்று புதன் சேர்க்கைப் பெறுகின்றபோது கலைத்தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வி யோகம் உண்டாகும்.

ஒருவர் எவ்வளவுதான் கல்விரீதியாக உயர்வுகளைப் பெற்றாலும், பல பட்டங்களை வாங்கியிருந்தாலும் கற்ற கல்விக்கேற்ற பணியையோ, தொழிலையோ செய்ய முடியாத நிலை உண்டாகி விடுகிறது. பிற தொழிலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. 4-ஆம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பார்த் தாலும், 4-ஆம் அதிபதி அல்லது புதன் வக்ரம் பெற்றாலும் இந்த நிலை உண்டாகிறது.
 

Next Story

மனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வுக்கு...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தேவையற்ற கெட்ட பழக்கங்களுக்கு பல நேரங்களில் அடிமையாகிவிடுகிறான். அதனால் அவனுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. பல திறமைசாலிகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, கிடைத்த வாழ்க்கையையே வீணடித்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு உடல்நலம் கெட்டுவிடுகிறது. பலர் ஈரலில் பாதிப்பு உண்டாகி, குறைந்த வயதிலேயே இறந்துவிடுகிறார்கள். பலருக்கு கைகால்களிலும் ஒரே நடுக்கம். பலர் அளவுக்குமேல் கோப குணத்திற்கு ஆளாகி, கொலைகாரர்களாகக்கூட ஆகிவிடுகிறார்கள். அவர்களுடைய குடும்ப வாழ்க்கையே துயரங்கள் நிறைந்ததாகிவிடுகிறது. கணவனும் மனைவியும் விவாகரத்து செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலைகூட உண்டாகிவிடுகிறது. மதுப்பழக்கம் எந்த அளவுக்கு ஒரு மனிதனின் வாழ்க்கையையே அழித்துவிடுகிறது என்பதை நாம் பலரின் வாழ்க்கையிலும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இதற்கெல்லாம் காரணம்- ஜாதகத்திலிருக்கும் கிரகங்களின் சேர்க்கைதான்.

 

god



ஒருவர் ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்ந்து லக்னத்திலிருக்க, அந்த ஜாதகத்தில் 6-ல் பாவ கிரகம் இருந்தால், அவர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மது அருந்துவார். லக்னத்தில் சூரியன், சனி, சுக்கிரன் இருந்தால், அந்த மனிதர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவார். விரய ஸ்தானத்தில் சூரியன், ராகு, செவ்வாய் அல்லது சுக்கிரன், ராகு, செவ்வாய் அல்லது சனி, சூரியன், ராகு இருந்தால் அந்த ஜாதகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, அதே ஜாதகத்தில் லக்னாதிபதி பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது 2-க்கு அதிபதி 6-ஆம் அதிபதியுடன் லக்னத்தில் இருந்தால் அவர் மதுவுக்கு அடிமையானவராக இருப்பார். 10-க்கு அதிபதி 6-ல் லக்னாதிபதியுடன் இருந்தால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவார்.லக்னத்தில் சூரியன், கேது அல்லது சூரியன், ராகு, 7-ல் சனி இருந்தால் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். அத்துடன் சூதாடுபவராகவும் இருப்பார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உச்சமாக இருந்து, அந்த சந்திரனுக்கு ராகுவின் பார்வை இருந்தால், அதே ஜாதகத்தில் சூரியனை சனி பார்த்தால், அந்த ஜாதகர் ரகசியமாக மதுப்பழக்கம் உள்ளவராக இருப்பார்.

செவ்வாய், சனி, ராகு லக்னத்தில் அல்லது 8-ல் இருந்தால், ஜாதகர் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். ஜாதகத்தில் லக்னத்தில் புதன் இருந்து, அந்த புதன் அஸ்தமனமாகவோ நீசமாகவோ அல்லது விரய ஸ்தானாதிபதி நட்சத்திரத்திலோ இருந்தால், அவர் குடிப்பழக்கம் கொண்டவராக இருப்பார். ஒரு ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 6-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார். ஒரு மனிதரின் வீட்டின் தென்கிழக்கில் வாசல் இருந்து, வடகிழக்கில் சமையலறை இருந்தால் அவர் குடிகாரராக இருப்பார். அதே வீட்டில் அவரின் படுக்கையறை வடமேற்கில் இருந்து, அந்த அறைக்கு தென்கிழக்கு வாசல் இருந்து, அதில் அவர் மேற்கில் தலைவைத்துப் படுத்தால் அவர் முழு குடிகாரராக இருப்பார்.

 

god



ஒரு வீட்டிற்கு வடக்கு திசையில் வடகிழக்கில் வாசல் இருந்து, அந்த வீட்டிற்கு மத்தியப்பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அந்த வீட்டின் படுக்கையறை தென்கிழக்கில் இருந்தால், அவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். ஒரு வீட்டிற்கு வடக்கு திசையில் வடமேற்கில் வாசல் இருந்தால், அந்த வீட்டின் தென்கிழக்கிலோ அல்லது வடகிழக்கிலோ படுக்கையறை இருந்தால், அவர் குடிகாரராக இருப்பார். அந்த பழக்கத்தால் தன் சொத்துகளைக்கூட அவர் இழப்பார்.

பரிகாரங்கள் 

மனதைக் கட்டுப்படுத்துவதற்கு தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் கிழக்குதிசை நோக்கி அமர்ந்து சிவபெருமானின் திருநாமத்தைக் கூறவேண்டும். சூரியன் உதயமான பிறகு, சூரியனுக்கு நீர் வார்க்க வேண்டும். தன் முன்னோர்களை வணங்குதல் சிறப்பானது. தெற்குதிசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும். கருப்பு, அடர்த்தியான ப்ரவுன், அடர்த்தியான நீலம் போன்ற வண்ணமுடைய ஆடைகளைத் தவிர்க்கவும். வீட்டில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் தூபம், தீபம் ஏற்ற வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும்போது, நீருடன் சிறிது கற்பூரம், கோமியம் ஆகியவற்றையும் கலந்து சுத்தம் செய்யவேண்டும். படுக்கையறையில் அடர்த்தியான பச்சை, நீலம், ப்ரவுன் ஆகிய வண்ணங்கள் இருக்கக் கூடாது. தினமும் சிவாலயம் சென்று, சிவலிங்கத்துக்கு நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். வீட்டில் ஸ்படிக லிங்கம் இருந்தால் அதற்கு தினமும் பூஜை செய்வது நற்பலன் தரும். மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால், ஒரு மனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வு வாழலாம்.