இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்ததன் பத்தாம் ஆண்டு நினைவு நாள் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தினர்.
இதே தினம் இலங்கையில் 'தேசிய போர் நாயகர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் சிறிசேன, "இலங்கையில் நிலவி வந்த உள்நாட்டு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 30 ஆண்டுகால உள்நாட்டு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் அமைதியான நாடக இருந்த இலங்கையில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பு அமைதியை சீர்குலைத்து. இலங்கை ராணுவம் விடுதலை புலிகளுக்கு எதிராக பணி புரிந்த அனுபவங்களை பயன்படுத்தி வருங்காலங்களில் இலங்கையை காக்க வேண்டும். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ராணுவத்தால் கூட விடுதலை புலிகளை தோற்கடிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.