Skip to main content

போலீஸ் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய மக்கள்...

Published on 03/12/2018 | Edited on 03/12/2018

 

tea

 

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கடந்த 3 வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சுமார் 1600 க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் பிரான்சில் பல பிரபலமான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீஸுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் பொழுது முகமூடி அணிந்த சில போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இந்த சூழலை  கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் மேக்ரான் தலைமையில் அவசர ஆலோசனை  நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்