தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக மியான்மர் கொண்டு செல்லப்பட்ட இந்தியர்கள் ஆயுதக்குழுக்களின் பிடியில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மியாவடி பகுதியில் 60 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில், மற்றவர்களை மிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மியான்மர் நாட்டு அரசு மற்றும் பல்வேறு தரப்பு தொடர்புகள் மூலம் இந்தியர்களை மிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டேட்டா என்ட்ரி பணி எனக்கூறி இந்தியர்களை மியான்மருக்கு கடத்தி சட்டவிரோத பணி செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், இணையதளம் வழியிலான சட்டவிரோத பணிகளை செய்ய மறுப்பவர்களை தாக்கி துன்புறுத்துவதாகவும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், தாய்லாந்து நாட்டில் பணி என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்து நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான விசாவை எடுத்துக்கொண்டு அங்கே சென்றவுடன் சட்டவிரோதமாக அவர்களை கட்டுப்பாட்டில் எடுத்து அங்கிருந்து தாய்லாந்தின் மயான்மர் எல்லையை கடக்கிறார்கள். அங்கிருந்து கடல் கடந்து தீவுகளை கடந்து மியாவடி என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்திய தூதரகம் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டு அதிகாரிகளிடம் பேசி வருகிறார்கள்.