கூகுள் மேப் காட்டிய தவறான வழியால் 100 க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே நேரத்தில் தவறான வழியில் சென்று சேற்றில் சிக்கிக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கோலோராடோ பகுதியில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்திற்கு சிலர் வழியை கூகுள் மேப்பில் தேடியுள்ளனர். அப்போது அது தூரம் குறைவான பாதை என்று ஒரு வழியை காட்டியுள்ளது. அதனை நம்பி உள்ளே சென்றவர்கள் அங்கு பாதையே இல்லாமல் பாதி வழியில் சிக்கி தவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்தப் பாதையில் சென்று சிக்கிக்கொண்ட பயணி ஒருவர் கூறுகையில், “நான் விமான நிலையத்திற்குச் சென்றேன். அப்போது குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதை குறித்து கூகுள் மேப்பில் தேடினேன். அதனையடுத்து கூகுள் காட்டிய மற்றொரு பாதையில் சென்றேன். அந்த வழியில் சென்ற போது தான் தெரிந்தது, அங்கு சாலையை இல்லை என்றும், அது தவறான வழி என்றும். மேலும் பாதி வழியை அடைந்த போது தான் அங்கு சுமார் 100 வாகனங்கள் இதேபோல தவறாக வந்துள்ளது என தெரிந்தது” எனக் கூறினார். இப்படி தவறான வழிகாட்டுதலால் 100 க்கும் மேற்பட்டவர்களை சிக்க வைத்த கூகுளை இணையவாசிகள் வெறுத்தெடுத்து வருகின்றனர்.