
தன்னுடன் தொடர்பில் இருந்தவருக்கு கரோனா ஏற்பட்டதை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவருக்கு கரோனா ஏற்பட்டதைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "என்னுடன் தொடர்பிலிருந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நான் நன்றாக இருக்கிறேன், எனக்கு எவ்விதமான அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் வரவிருக்கும் நாட்களில் சுய தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்து பணியாற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.