Skip to main content

ஜப்பானை சேர்ந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! 

Published on 11/10/2024 | Edited on 11/10/2024
Nobel Peace Prize announcement for Japanese organization

மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

அதன்படி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்குப் பிறகு மைக்ரோ ஆர்.என்.ஏ. என்ற செல்லின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்ட உள்ளது. அதேபோன்று, இயற்பியலுக்கான நோபல் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம். ஜம்பர் 3 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவரும் நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. அதேபோன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நுட்பங்களை எடுத்துரைக்கும் கவிதைகளுக்காக ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளால்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மேம்படுத்துவதற்காகவும், நகரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காகவும் பல்வேறு முயற்சிகளை நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்