Published on 19/07/2018 | Edited on 19/07/2018
கூகுள் நிறுவனம் தனது பயனர்களை அதிகரிக்க வைக்கும் நோக்கில் ஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்டுத்தி விதிகளை மீறி செயல்பட்டதாக ஐரோப்பிய யூனியன் கூகுளுக்கு அபராதம் விதித்துள்ளது.
பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம் தற்போது அதிக பயனர்களைக்கொண்ட ஒரு சர்ச் என்ஜினாக இருந்துவருகிறது. ஆனால் அதிக பயனர்களை கொண்டுவர கூகுள் விதிகளை மீறி ஆண்ட்ராய்டை உபயோகித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து கடந்த மூன்று வருடங்களாக விசாரிக்கப்பட்டுவந்தது.
இதனடிப்படையில் ஐரோப்பிய யூனியனின் விதிகளை மீறி கூகுள் நிறுவனம் செயல்பட்டதாக கூறி கூகுள் நிறுவனத்திற்கு 5 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 34,218 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் அபராதம் செலுத்தமுடியாது என அறிவித்துள்ள கூகுள் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.