Published on 18/03/2020 | Edited on 18/03/2020
உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கரோனா வைரஸால் 1,99,475 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82,812 பேர் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 41 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.