Skip to main content

சீனாவில் சார்ஸ் பலி எண்ணிக்கையை கடந்த கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை... பீதியில் மக்கள்...

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 361 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

corona fatalities surpasses sars fatalities

 

 

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் காரணமாக சீனாவில் 349 இறந்த நிலையில், கரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை அதனை தற்போது கடந்துள்ளது. இதன் காரணமாக சீன மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்