Published on 18/12/2019 | Edited on 18/12/2019
உலகில் அதிசயங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அடிக்கடி மக்கள் ஆச்சரியப்படும்படி ஏதாவது ஒன்று நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில், அந்த வகையில் அமெரிக்காவின் ஓய்ட் நகரில் தீயணைப்பு துறையில் பணியாற்றுபவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்படும்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாத குழந்தை கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளது. மேயர் சார்லி என்று அழைக்கப்படும் அந்த குழந்தை கடந்த 15ம் தேதி மேயர் பதவி ஏற்றது. குழந்தை மேயராக பதவியேற்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.