Published on 23/11/2019 | Edited on 23/11/2019
கனடாவில் 338 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு கடந்தமாதம் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இறுதியில் 157 தொகுதிகளைக் கைபற்றி லிபரல் கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது.
இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு அதன் அமைச்சர்கள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்தப் பட்டியலில், அனிதா ஆனந்த் என்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் இடம்பெற்றுள்ளார். கனடா அமைச்சரவையில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். இந்த சிறப்பை அனிதா ஆனந்த் பெற்றுள்ளார்.