2017-ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு!
2017ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் சமூக நலனுக்காக உதவுபவர்களுக்கு நோபல் பரிசுகளும், பரிசுத்தொகையும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் யங் ஆகிய மூவரும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசைக் கூட்டாகப் பெறுவதாக, ஸ்வீடன் நாட்டின் நோபல் பரிசுவழங்கும் குழு அறிவித்துள்ளது. இவர்கள் மூலக்கூறுகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் ஆய்வில் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய உடலின் உயிர்க்கடிகாரம் என அழைக்கப்படுகிற ‘பயாலாஜிக்கல் க்ளாக்’, பிரபஞ்சத்தின் செயல்பாடுகளோடு எப்படி ஒத்துப்போகிறது என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளனர். இவர்களின் இந்த ஆய்வு உயிரினங்களின் மூலக்கூறு செயல்பாடுகள் குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் நோபல் பரிசு கொடுத்து கௌவரிக்கப்படவுள்ளனர்.
மேலும், பரிசுத்தொகையான ரூ.7கோடி நோபல் பரிசுபெறும் மூவருக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப் படவுள்ளது.
- ச.ப.மதிவாணன்