Skip to main content

மின்சாரவேலியில் சிக்கி இளைஞர் மரணம்; தொடரும் சோகம்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

youth passes away due to trapped in electric fence

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது மேல் ஒலக்கூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் அரங்கநாதன் (45). இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை இரவு முழுவதும் அவரைக் காணாது அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அவர் கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில் மறுநாள் காலை 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு அதே கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவரது கரும்புத் தோட்டத்திற்குள் வனவிலங்குகள் சென்று விடாதபடி தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி அரங்கநாதன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து செஞ்சி போலீசாருக்கும் அரங்கநாதன் உறவினர்களுக்குத் தகவல் அளித்தனர்.

 

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் தங்கள் வயல்களில் மின்சார வேலி அமைக்கின்றனர். அதில், அப்பாவி மக்கள் சிக்கி இறந்துபோகும் சம்பவங்கள் வட மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்