புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்து மகன் முத்துகாளீஸ்வரன் (வயது 29). விவசாயி. ஞாயிற்றுக் கிழமை மதியம் அதே பகுதியில் உள்ள வெள்ளையப்பன் கோயில் காட்டில் இருந்து பால்குடத்தில் தாமரை மலர்களை வைத்து பா.ஜ.க கொடியை உயர்த்தி பிடித்தபடியே ஆலங்குடி நாடியம்மன் கோயில் நோக்கி நடந்து புறப்பட்டார்.
வடகாடு வழியாக சுமார் 20 கி.மீ பால்குடத்துடன் நடந்து சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தார்.
இது குறித்து முத்துகாளீஸ்வரன் கூறும்போது... நெடுவாசல் திட்டம் வரும்போது நானும் போராட்டங்களில் கலந்து கொண்டு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக் கூடாது என்று எதிர்த்தேன். அதன் பிறகு மத்திய அரசு திட்டம் வராது என்று சொன்னது. இதுவரை அந்த திட்டம் வரவில்லை. இனியும் வராது என்று நம்புகிறேன். அதனால் நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும். மோடி பிரதர் ஆக வேண்டும் என்ற வேண்டுதலுடன் பால்குடம் எடுத்து செல்கிறேன் என்றார்.