Skip to main content

நான்கு உயிர்களைப் பறித்த தவறான உறவு...

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

cc

 


ஒரு பெண், தான் பெற்ற குழந்தையைக் கொலைசெய்து, உடலை வேளாங்கண்ணியில் விடுதி அறையில் பூட்டிவிட்டு, இன்னொரு குழந்தை மற்றும் இன்னொருவருடன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டிருக்கிறாள். 

 

வேலூர் மாவட்டம் - கணியம்பாடி அருகிலுள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தனசேகர் என்பவரின் மனைவி ஜெயந்தி. உறவினரான கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயந்திக்கும் தவறான உறவு இருந்திருக்கிறது. இருவரும், குழந்தைகள் மகாலட்சுமி மற்றும் ஸ்ரீலட்சுமியுடன் கடந்த 27-ஆம் தேதி  வேளாங்கண்ணிக்கு கிளம்பினர். இவர்கள் வீடு திரும்பவில்லை.  வேளாங்கண்ணியில் விடுதி அறை ஒன்றில், குழந்தை மகாலட்சுமியைத் தலையனை வைத்து அழுத்திக் கொலை செய்து,  அந்த அறையில் உடலை வைத்துப் பூட்டிவிட்டு, தலைமறைவானார்கள். 

 

அடுத்த சில நாட்களிலேயே அந்த உறவு கசந்து, எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தை ஸ்ரீலட்சுமியோடு, ஜெயந்தியும், கோபாலகிருஷ்ணனும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.  அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டை முகவரியை வைத்து விசாரணை செய்தபோது,   குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றதால்,  ஆந்திராவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்திருக்கிறது. 

 

கொலை, தற்கொலை என நான்கு உயிர்களைப் பலிகொண்டுவிட்டது ஜெயந்தியின் தவறான உறவு.  மனைவி, குழந்தைகளை இழந்து, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுத் தனிமரமாக நிற்கிறார் தனசேகர்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் வங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

 

கோவையில் இந்தியன் வங்கி முன்பு  விஷம் குடித்து விவசாயி பூபதி தற்கொலை செய்துகொண்டார்.

 

s

 


சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த  விவசாயி பூபதி, தனது நண்பர்களுடன் இணைந்து பால்பண்னை தொடங்குவதற்காக இந்தியன் வங்கியில் கடன் பெற்றுள்ளார்.  அடமான பத்திரங்களை வைத்தே இந்த கடன் பெறப்பட்டுள்ளது.   பால் பண்ணை லாபகரமாக இயங்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.   இந்த நிலையில் வங்கியில் வைத்த பத்திரத்தை மீட்பதற்காக சென்றார் பூபதி.   கடனை திருப்பி செலுத்தினால்தான் பத்திரம் தரப்படும் என்று வங்கி கூறியபோது,   தனது பங்கு கடனை மட்டும் எப்படியாவது செலுத்திவிடுகிறேன் என்று கூறி பத்திரத்தை கேட்டிருக்கிறார் பூபதி.  இதனால் பூபதிக்கும் வங்கி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.   

 

 3 பேரும் கடனை திருப்பி செலுத்தினால்தான் பத்திரத்தை தர முடியும் என்று வங்கி  மேலாளர் உறுதியாக சொல்லிவிட்டதால் விரக்தியில் விவசாயி பூபதி வங்கி முன்பு பூச்சிமருந்து  குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Next Story

தஞ்சையில் குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை 

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

 


தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்புதாசன் (வயது 30) விவசாயி. இவருக்கும் வேதாரண்யம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் - கல்யாணசுந்தரி தம்பதிகளின் மகள் கார்த்திகாவுக்கும் (வயது 25) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. 

 

h

 

இந்நிலையில் அன்புதாசனுக்கும், கார்த்திகாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகா, சனிக்கிழமை இரவு கணவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடு‌த்து கார்த்திகாயின் உடல், உடற்கூறாய்விற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

இந்த நிலையில் இறந்த கார்த்திகாவின் தாய் கல்யாணசுந்தரி, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.