முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்களின் மதிப்பை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் நடத்திய சோதனையில் 2.30 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தங்கமணி தெரிவித்துள்ளார்.