பெண் உதவியாளருடன் அடிக்கடி செல்போனில் பேசிய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை..!
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகிலுள்ள நெய்க்காரப்பட்டி, இளந்தோப்பை சேர்ந்தவர் சாமுவேல் துரை ஆபிரகாம் (வயது-35). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில், உத்தமசோழபுரம் அருகிலுள்ள மேட்டுக்காட்டான் தெருவை சேர்ந்த தங்கராஜ் (வயது-33). என்பவரின் மனைவி அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார்.
ஒரே பள்ளியில் வேலை பார்த்து வரும் ஆசிரியர் சாமுவேல் துரை ஆபிரகாமும், அலுவலக உதவியாளரும், அடிக்கடி மொபைலில் பேசி வந்துள்ளனர். இதை, தங்கராஜ் பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து ஆசிரியர் சாமுவேல் துரை ஆபிரகாமும். தங்கராஜின் மனைவியும் தொடர்ந்து செல்போனின் பேசி வந்ததால், ஆத்திரமடைந்த தங்கராஜ், நேற்று ஆசிரியர் சாமுவேல் துரை ஆபிரகாம் வீட்டுக்கு சென்றவர், ஆசிரியரை பிடித்து கீழே தள்ளி அவரை பலமாக தாக்கியுள்ளார்.
இதைதொடர்ந்து, ஆசிரியர் சாமுவேல் துரை ஆபிரகாம் அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், தங்கராஜை கைது செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-பெ.சிவசுப்பிரமணியம்