தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தோ்தலில் 100 சதவிதம் வாக்களிப்பதற்கான விழிப்புணா்வுகளை ஏற்படுத்தும் விதமாக தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்ட நிா்வாகமும் தனியாா் அமைப்புகளும் தொடா்ந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூாியில் கலெக்டா் பிரசாந்த் வடநேரா தலைமையில் விழிப்புணா்வு மனித சங்கிலி நடந்தது. இதில் அந்த கல்லூாி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். அப்போது அவா்களிடம் பேசிய கலெக்டா் வாக்களிப்பதன் அவசியத்தை கூறிய அவா் உங்களில் முதல் முதலாக வாக்களிக்க இருக்கும் நீங்கள் வாக்களிக்க தகுதியுடைய உங்களுடைய பெற்றோா்கள் உடன்பிறப்புகள் உறவினா்கள் நண்பா்களை உங்களோடு வாக்களிக்க அழைத்து வரவேண்டும்.
மேலும் தோ்தல் முடிந்து கல்லூாிக்கு நீங்கள் வரும் போது யாா் யாா் கையில் வாக்களித்ததற்கான அடையாள மை இல்லையோ அவா்களுக்கு வருகை பதிவு கிடையாது என நகைச்சுவையாக பேசி மாணவ மாணவிகளை கலெக்டா் கலாய்த்தாா். இதை தொடா்ந்து மாணவ மாணவிகள் 100 சதவிதம் வாக்களிப்பை தருவேம் என உறுதி கொண்டனா்.