Skip to main content

சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் - ராமதாஸ்

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் - ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டாலும், மிக கொடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட அடுத்த வாரமே 7 தமிழர்களையும் விடுதலை செய்யப்போவதாக அப்போதைய முதல்வர் ஜெ., அறிவித்தார். ஆனால், அதன்பின் 3½ ஆண்டுகள் ஆகியும் 7 பேருடைய விடுதலை தாமதமாகிக்கொண்டே செல்கிறது.

இவர்களில் பேரறிவாளன் ஏராளமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால், ஒரு மாதமாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பரோலில் விடுவிக்கவேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், வரும் 15–ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்