Published on 01/06/2020 | Edited on 01/06/2020
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் சில தளர்வுகளும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நாளை மறுநாள் சமய தலைவர்களுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.