Skip to main content

விருதுநகர் மாவட்டம்! மாவட்ட ஊராட்சி அதிமுக வசம்! 7 ஒன்றியங்களில் 5 திமுகவுக்கே!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

 

நக்கீரன் இணையத்தில் கடந்த 8-ஆம் தேதி ‘திமுக ஒன்றியங்களைத் தட்டிப் பறிப்போம்! விருதுநகர் மாவட்ட ஆளும்கட்சி கொக்கரிப்பு’ என்னும் தலைப்பில் வெளியான செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்த (அதிமுக) வசந்தி, விருதுநகர் மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்வாகியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராக (அதிமுக) சுபாஷிணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

விருதுநகர் மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றிய அதிமுகவால், மொத்தம் உள்ள 11 ஒன்றியங்களில் இரண்டில் மட்டுமே தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது. விருதுநகர் ஒன்றியக் குழுத் தலைவராக சுமதியும், துணைத் தலைவராக முத்துலட்சுமியும் பொறுப்பேற்றுள்ளனர். அடுத்து, வெம்பக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவராக பஞ்சவர்ணமும், துணைத் தலைவராக ராமராஜும் வெற்றி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவை விட இரண்டு மடங்கிலும்  அதிகமாக,  மொத்தம் 5 ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அருப்புக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவராக (திமுக) சசிகலாவும், துணைத் தலைவராக (சுயேச்சை) உதய சூரியனும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். காரியாபட்டி ஒன்றியக் குழுத் தலைவராக (திமுக) முத்துமாரியும், துணைத் தலைவராக (திமுக) ராஜேந்திரனும் பொறுப்பேற்றுள்ளனர். திருச்சுழி ஒன்றியக் குழுத் தலைவராக (திமுக) பொன்னுச்சாமியும், துணைத் தலைவராக (திமுக) மூக்கனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் குழுத் தலைவராக (திமுக) ஆறுமுகமும், துணைத் தலைவராக ராஜேஸ்வரியும் போட்டியின்றி தேர்வாகி இருக்கின்றனர். சிவகாசி ஒன்றியக் குழுத் தலைவராக (திமுக) முத்துலட்சுமியும், துணைத் தலைவராக  முத்துலட்சுமியின் கணவரும் திமுக ஓன்றிய செயலாளருமான விவேகன்ராஜும் பொறுப்பேற்றுள்ளனர்.    

நரிக்குடி, வத்திராயிருப்பு, சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஒன்றியங்களில் அரிவாள் வீச்சு, அடிதடி, ஊராட்சி மன்ற அலுவலகம் சூறை என மோதல் உருவானதால், அந்த 4 ஒன்றியங்களிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்