Skip to main content

கொட்டும் பனியில் கிராம நிர்வாக அலுவலகர்கள் தர்ணா போராட்டம்

Published on 09/01/2018 | Edited on 09/01/2018

 கொட்டும் பனியில் 
கிராம நிர்வாக அலுவலகர்கள் தர்ணா போராட்டம்

தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகர்கள் இன்று மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாசியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலகர் சங்கத்தின் கீழக்கரை வட்டதலைவர் கருப்பையா, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் மாரியப்பன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுபற்றி கீழக்கரை வட்டதலைவர் கருப்பையா கூறுகையில், இன்று மாலை 6 மணிமுதல் காலை 6 வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடபோகிறோம்.

1.ஆன்லைன் சான்றுகள் பட்டா மாறுதல் பரிந்துரைகளுக்கு உரிய செலவின தொகை வழங்க வேண்டும்.
2.இணையதள வசதி செய்து தரவேண்டும்.
3.சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்த வேண்டும்.
4.கூடுதல் பொறுப்பு கிராமம் பார்பவர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்