பரப்பளவில் பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டம், இரண்டு மாதத்துக்கு முன்பு வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை என மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதில் எந்தந்த வருவாய் கிராமங்கள் எந்தந்த மாவட்டங்களில் அமைவது என கருத்துக்கேட்டு முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை, ஆவுலரங்கப்பள்ளி, பாலேகுப்பம், கீரைசாத்து ஆகிய 4 வருவாய் ஊராட்சிகளை சேர்ந்த 38 கிராமங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களை வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்மென ஜனவரி 21ந் தேதி ராணிப்பேட்டை அடுத்த பொன்னை பேருந்து நிலையத்தில் கடையடைப்பு நடத்தினர். அதோடு உண்ணாவிரதம் நடத்தினர்.
இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு, தங்களுக்கும் வேலூர் மாவட்ட தலைநகரத்துக்கும் இடையே நீண்ட தூரமாக இருப்பதால் தங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தோடு இணைக்க வேண்டும்தான், அதுதான் எங்களுக்கு வசதியானது என்றனர். இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து மனு தந்துள்ளதாகவும், அதில் நல்ல முடிவெடுக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.