திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளியில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் மேற்கொண்ட சோதனை இரவில் நிறைவு பெற்றது.
கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், சமையலறைகள், கல்லூரியின் விடுதியில் உள்ள அறைகள் முழுவதையும் சல்லடை போட்டு ஆராய்ந்தார்கள். அலமாறிகளை உடைத்தும் சோதனை யிட்டார்கள். ஆனால், இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அவர்களே எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர் என்று துரைமுருகன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து வருமான வரித்துறையினர் அளித்த தகவலில், வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களும் துரைமுருகன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.