கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்
பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
கோவை மாநகராட்சி யில் ஒப்பந்த அடிப்படையில் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சியிலுள்ள குப்பைகளை நூறு வார்டுகளிலும் எடுத்துச்செல்வதற்கு டெண்டர் எடுத்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஒட்டுனர்கள் மற்றும் கிளீனர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை, வாகன பராமரிப்பு, விபத்து காப்பீடு மற்றும் தீபாவளி போனஸ், மாத சம்பளத்தை ஆறாம் தேதிக்குள் வழங்கவும், பல வருடங்களாக பணிபுரிந்து வரும் கிளினர்களை ஒட்டுனர்களாக தரம் உயர்த்துதல் உட்பட 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டவுன்ஹாலிலுள்ள மாநகராட்சி வாகன் நிறுத்துமிடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகரட்சி ஒப்பந்தாரர் சார்பிலும், மண்டல அதிகாரிகள் வந்து ஓட்டுனர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நேற்று மதியத்திற்குள் சம்பளம் கொடுக்கப்படும் எனவும் உடனே பணிக்கு திரும்புமாறு அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்டுனர்கள் அடிப்படை உரிமைகளை ஒப்பந்ததாரர்கள் தர மறுப்பதாக குற்றம் சாட்டினர். கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் அரசியல் பின்புலத்தோடு பினாமி பெயரில் எடுத்து நடத்துவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசே மாநகராட்சி எடுத்த நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டுமென்றனர்.
-அருள்