வளர்மதி, திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீதான குண்டர் சட்டத்தைக் கண்டித்து கண்டனக் கூட்டம்
காஞ்சி பெரியார் தூண் அருகே ராஜ்பவன் திருமண மண்டபம். ஆகஸ்ட் 1ம் நாள் காலை 11 மணிக்கு செயற்பாட்டாளர்களான வளர்மதி, திருமுருகன், டைசன், அருண்குமார், இளமாறன் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தைக் கண்டித்து, இந்திய மக்கள் முன்னணி, அம்பேட்கர் பொதுவுடைமை முன்னணி, இந்திய மாணவர் முன்னணி நடத்தியக் கண்டனக்கூட்டம் நடைப்பெற்றது. அண்டைக் கிராமங்களிலிருந்து, 70 இளைஞர்கள், மாணவர்கள் அணிதிரண்டிருந்தனர்.
மூன்று மணி நேரம் ஆடாமல், அசையாமல், கூட்டத்தில் நடத்தப்பட.ட உரைகளை, அவையோர் அடக்கமாக்க் கேட்டனர். இந்திய மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் சாலமன் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். ஆர்ப்பாட்டத்திற்கு, அனுமதி கொடுத்து விட்டு, மறுத்துவிட்ட காவல்துறையின் செயலால், அரங்குக் கூட்டம் கூட்டியிருந்தார்.
தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம் சார்ந்த காஞ்சி அமுதன், அம்பேட்கர் பொதுவுடைமை முன்னணியின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சந்தோசம், மக்கள் சிவில் உரிமைக் கழகத.தைச்( பி.யூ.சி.எல்.)சார்ந்தவர்களான, தமிழினியன், அருங்குன்றம் தேவராஜ், டி்எஸ்.எஸ்.மணி, இந்திய்மக்கள முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் த.வி.ராகவராஜ், மற்றும் பலர் கண்டன உரை நிகழ்த்தினர். பி.யூ.சி.எல். சார்பில், இந்திய அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை, தடுப்புக் காவல் சட்டங்களான மிசா,தடா,பொடா,யூ.ஏ.பி.ஏ ஆகியவை நடுவண் அரசால் பறிக்கப்படுகின்றன என்பது விளக்கப்படது
மக்கள் சிவில் உரிமைக் கழகம்( பி.யூ.சி.எல்.) சார்பாக,,தமிழக அரசின் குண்டர் சட்டம் எவ்வாறு அரசியல் சட்டம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது என்றும், தமிழ்நாட்டில் 2014 ல் கொண்டு வரப்பட்ட குண்டர் சட்டத் திருத்தங்கள் எத்தனை கொடியவை என்பது பற்றியும், கூடுதலாக விளக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொடுத்த பதிலில், எந்த அளவு உண்மையில்லை, தவறான தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டது.