
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் இன்று காலை வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது வைரமுத்து கலைஞரின் உடலை பார்த்து கதறி அழுதார். கண்ணாடி பேழை மீது முகத்தை வைத்து அழுதார். பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கட்டி அணைத்து கண்ணீர் விட்டார்.