தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் அளவுக்கதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால் வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கண்ணாடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக எஸ்.எம்.எஸ் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், 'மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் வெளியேற்றப்படுவதாலும், மதுரை வைகை கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.