Skip to main content

18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம்! முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைப்பு!!

Published on 03/01/2022 | Edited on 04/01/2022

 

jk

 

புதுச்சேரியில் இதுவரை 13,97,207 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் 15 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று முதல் துவங்கியது. அதன்படி, புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் 15 முதுல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவை ஆன்லைன் அல்லது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் பதிவு செய்யலாம். 

 

முதற்கட்டமாக 80 ஆயிரம் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இதற்காக மத்திய அரசின் சுகாதாரத் துறையிலிருந்து 83 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவை குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 15 முதல் 18 வயதினர் சுமார் 1 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவர்களாக உள்ளனர். 

 

முதலில் பள்ளிகளுக்கும், தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசிகளை செலுத்தப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளிலேயே மாணவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதியப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இப்பணியில் 1,000 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்