Skip to main content

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்! (படங்கள்)

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

சென்னையில் கடந்த ஆறாம் தேதி முதலே பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் அகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் நீர் அதிகமாக தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் நேற்று (7.11.2021) சென்னையின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து பாதுகாப்பு பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்