Skip to main content

'நான்தாப்பா பைக் திருடன்' ட்விட்டரில் ட்ரெண்டான ரஜினியை 'நீங்க யாருனு கேட்ட' வாலிபரின் கைது சம்பவம்!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்ட ரஜினி ஆறுதல் கூறினார். அதே போல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என நடிகர் ரஜினியை பார்த்து கேட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 
 

rajinikanth



  santhosh



இந்த நிலையில் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் (24). இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் துாத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் (23), மற்றும் கால்டுவெல் காலனியை சேர்ந்த மணி (23), ஆசிரியர் காலனியை சேர்ந்த சரவணன் (22), ஆகியோர் பைக்கை திருடியது தெரியவந்தது. கைதான சந்தோஷ், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ரஜினியை பார்த்து ஆமா.. நீங்க யார் என்று கேட்க அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து தற்போது திருட்டு வழக்கில் சந்தோஷ் கைதாகியுள்ள நிலையில், ட்விட்டரில் இந்திய அளவில் நான் தாப்பா பைக் திருடன் என்று ட்ரெண்டாகி வருகிறது.     

 

சார்ந்த செய்திகள்