Skip to main content

’’உண்மை எப்போதும் வெல்லும்’’- விஷாலுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து!

Published on 06/12/2017 | Edited on 06/12/2017

’’உண்மை எப்போதும் வெல்லும்’’-
 விஷாலுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.  இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 வேட்புமனு தாக்கல் செய்ய முன்மொழிந்த தொகுதியைச்சேர்ந்த 10 பேரில் 2 பேர் திடீரென்று தாங்கள் முன்மொழியவில்லை என்று பின்வாங்கினர்.  இதனால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.என்னை முன்மொழிந்த அந்த 2 பேரும் மிரட்டப்பட்டுள்ளனர் என்று ஆடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். இதன் பின்னர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. 

வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ‘’விஷாலுக்கு வாழ்த்துக்கள். உண்மை எப்போதும் வெல்லும்’’ என்று விஷாலுக்கு மீண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்