திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த குமார், கடந்த 9ம் தேதி முதல் விமானம் மூலம் திருச்சி வந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சேதுரப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் கரோனோ சிறப்பு பணிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு கரோனா பணி முடிந்து, மன்னார்புரம் மேம்பாலத்தில் 13/05/2020 அன்று இரவு 10.30 மணியளவில் டூவிலரில் வரும்போது பின்னால் வந்த மினிடோர் வேன் வேகமாக மோதி விபத்தில் சம்பவ இடத்தில் இறந்தார்.
வேன் டிரைவர்களை கண்டோன்மென் போலீஸ் கைது செய்துள்ளனர். வி.ஏ.ஓ. குமாரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, அஞ்சலி செலுத்தி குமாரின் மனைவி கற்பகம், மற்றும் 2 குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது தமிழ்நாடு கிராம நிர்வாக அலுலர்கள் முன்னேற்றம் சங்கம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கரோனோ தொற்று நோய் தடுப்பில் ஈடுபட்டும் அரசு ஊழியர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் 50 லட்சமும் வாரிசு அடிப்படையில் பணி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது இறந்து போன வி.ஏ.ஓ. குமார் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வாரிசு அடிப்படையில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் இறந்து போன வி.ஏ.ஓ. குடும்பத்தினருக்கு 50 இலட்சம் நிதி உதவியும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை தருகிறோம் என்பதை உறுதி செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.