Skip to main content

கரும்பு சாகுபடி செய்த கைதிகள்; களைக்கட்டிய விற்பனை

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

trichy prisoners cultivated sugarcane at central jail

 

சிறைச்சாலையில் கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே  விற்றுத் தீர்ந்துள்ளன.

 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் கைதிகள் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். கைதிகள் பொங்கல் பண்டிகைக்காகவே பிரத்தியேகமாக கரும்புகளைச் சாகுபடி செய்திருந்தனர். விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த கரும்பை சிறையில் இருந்த கைதிகள் 20 பேர் நேற்று அறுவடை செய்தனர். இந்தப் பணிகளை சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி மேற்பார்வை செய்தார்.

 

விவசாயிகள் சாகுபடி செய்வதை விடக் கைதிகள் சாகுபடி செய்திருந்த கரும்புகள் திரட்சியாக, 7 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது. இந்தக் கரும்புகளை 10 கரும்புகள் கொண்ட கட்டுகளாகக் கட்டி சிறைச்சாலை முகப்பில் உள்ள  பிரிசன் பஜாரில் விற்பனைக்காக வைத்தனர். 10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.150 என நிர்ணயித்து விற்பனையைத் தொடங்கினர். கரும்புகள் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே விற்பனை களைக்கட்டியது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கைதிகளுக்குச் சம்பளமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்