Skip to main content

"தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" - திருச்சி மாவட்ட ஆட்சியர்  

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

trichy district collector press meet 

 

திருச்சி கம்டோன்மென்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்  தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது காய்ச்சல் நோயால் தினமும் 15லிருந்து 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.  ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். முகக் கவசங்கள், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்