டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் சி.பி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். இந்த விவகாரத்தில் டி.என்.பி.எஸ்சி. அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் முறைகேடு நடத்திருப்பது தெரியவந்தது.
இந்த மையங்களில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதியதும், முதல் 100 இடங்களை பிடித்த பலரும் இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியதும் வெளியேறியது. இதன் மூலம் டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள விஜயாபதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சி.பி.ஐ.டி.அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அவருக்கு குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தொடர்பிருப்பது தெரியவந்ததை அடுத்து நேற்று சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இவருக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.