திருப்பூர் அருகே கார் விபத்து: கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 5 பேர் பலி!
திருப்பூர் அருகே அவினாசி அடுத்த தெக்கலூரில் கார் கவிழ்ந்து விபத்தில் திருச்செங்கோடு கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 5 பேர் பலி - டிரைவர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த திருச்செங்கோடு கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி உட்பட 7 பேர் ஸ்கார்பியோ காரில் கோவை நோக்கி சென்றனர், ஸ்கார்பியோகாரானது, திருப்பூர் அருகே அவினாசியை அடுத்த தெக்கலூர் அருகே வரும்போது பின்னால் வந்த அரசு பேருந்து லேசாக காரில் மீது மோதியதில் கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து திடீரென மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்செங்கோடு கூட்டுறவு சங்க தலைவர் பி.என்.கந்தசாமி, துணைத்தலைவர் ஜேம்ஸ் ராமு, இயக்குநர் கதிர்வேல் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் படுகாயத்துடன் கார் டிரைவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தெக்கலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்லும் துணைத்தலைவர் ஜேம்ஸ் ராமுவை கோவை விமானநிலையம் சென்று வழியனுப்ப வந்தபோது நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அருள்குமார்