Skip to main content

மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
Sand sss



கடல்மணலை கொள்ளை அடித்த கும்பலை தடுத்த அரசு பெண் அதிகாரியை முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த மணல் கொள்ளையர்களை அடித்து உதைத்து காவல்துறையினர் கைது  செய்துள்ளனர்.
 

நாகப்பட்டினத்திற்கு அடுத்த நாகூர் கடற்கரையில் கடல் மணலையும் குறிவைத்து கொள்ளையடிக்கிறார்கள் என கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து  தொடர்ந்து புகார் சென்றிருக்கிறது. இந்நிலையில் ஜே.சி.பி. இயந்திரத்தைக்கொண்டு டிராக்டர்கள் மூலம் நாகூர் கடற்கரையில் மணல் எடுப்பதாக இன்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 
 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கனிமவளத்துறை அதிகாரிகள் மணல் ஏற்றிவந்த 3 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மணல் கடத்திய கும்பல், மறித்த அதிகாரியை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்த அதிகாரி அவர்களை மீண்டும் விரட்டி மடக்கி பிடித்தார். பிடிபட்ட மணல் கடத்தல் கும்பல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் கடல் மணலை ஏற்றி வந்த கும்பலை அடித்து உதைத்து கைது செய்தனர். மணல் ஏற்றிவந்த வாகனங்களை காவல்நிலையம் கொண்டுவர அந்த கும்பல் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் காவல்துறையினரே வாகனங்களை பறிமுதல் செய்து ஓட்டி வந்தனர். 
 

இது குறித்து காக்கிகள் கூறுகையில், "கடல் மணலை ஆற்றுமணல் எனக்கூறி விற்கின்றனர்.  கடல் மணலோடு நிலத்தடி மணலை கலப்படம் செய்து ஆற்றுமணல் என அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக்கொண்ட மணல் மாஃபியாக்கள் அதிகாரிகளின் உதவியோடு நிலத்தடி மனதை கொள்ளையடித்து வருகின்றனர்.  பிறகு  ஆறுகள், குளங்களில் உள்ள மணலை கொள்ளையடித்தனர். சமீபகாலமாக மணல் கடத்தலில் மணல் மாஃபியாக்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் ஆரம்பத்தில் லாரிகள் மூலமும் பிறகு டிராக்டர் மாட்டுவண்டி மூலமும் அதன் பிறகு டாடா ஏஸ், டூவீலர் என மணலை கடத்திவந்தார்கள். சமீப காலமாக ஆறுகளில் தண்ணீர் வந்ததால் படகுகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மிஞ்சும் வகையில் கடலோரத்தில் இருக்கின்ற கடல் மணலை இயந்திரம் மூலம் அள்ளி வந்து இதுதான் ஆற்று மணல் என அப்பாவி மக்களிடம் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாததுமாக இருந்து விடுகின்றனர். இந்த நிலையில் இன்று நாகூரில் பிடிபட்டுள்ளனர் என்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்