கஞ்சா விற்பனை என்பது குக்கிராமம் வரை சென்றுவிட்டது, கிராமங்களிலும் விற்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடியை உள்ளது சின்னியம்பேட்டை என்கிற குக்கிராமம். தானிப்பாடி டூ அரூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 1 கி.மீ மேற்பட்ட தூரத்தில் இருந்து உள்ளே உள்ள இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணி கஞ்சா விற்கிறார் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு புகார் கூறியுள்ளனர் அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள்.
அவர் உடனே தண்டராம்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் பாரதிக்கு தகவல் செல்லி அவரை பிடித்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்த குக்கிராமத்தில் உள்ள வீட்டுக்கு சென்று போலீஸார் சோதனை செய்ய, கஞ்சா இலை இருந்த மூட்டை சிக்கியுள்ளது. அதை விற்பனை செய்த கிருஷ்ணன் மனைவியான 50 வயதான வசந்தா என்பவரை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீஸார். 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட, அவர் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.