Published on 27/11/2019 | Edited on 27/11/2019
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோயிலில் வர்ணம் பூசுதல், சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துதால், மாடவீதி ஆக்கரமிப்புகள் அகற்றம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் நேற்று கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, எரிய விடப்பட்டது. இதனால் கோயில் கோபுரங்கள் அனைத்தும் மின் ஒளியில் மின்னின. இதை கோயில் மலை மீது ஏறி நின்று பார்த்தால், மின்ஒளியின் ஜொலிப்பில் கோபுரங்கள் புதிய அனுபவத்தை தருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் இளைஞர்கள் பலரும் மலை மீதேறி மின் அலங்காரத்தை ரசிக்க துவங்கியுள்ளனர். தற்போதிலிருந்தே தீபத்திருவிழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.