![Thiruvallur bike incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/e3u0LkQox_T9a1uo_z_5Hhma7s4ah4mbEb4jFJLRiTg/1660272186/sites/default/files/inline-images/N424.jpg)
சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி கையில் வைத்திருந்த பச்சிளம் குழந்தை சாலையில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர், கீழச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் குணா-முத்தமிழ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி திருவள்ளூரை அடுத்துள்ள கே ஜி கண்டிகையில் உள்ள பள்ளி ஒன்றுக்கு குரூப் 4 தேர்வு எழுத முத்தமிழ் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். உடன் குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளனர். தேர்வு முடிந்து மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் பேரம்பாக்கம் பகுதியில் பைக்கில் சென்ற தம்பதியினர் கீழே விழுந்தனர். அதில் அவர்களது 7 மாத குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. அதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.