Published on 20/01/2021 | Edited on 20/01/2021
திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சூரியூரில் இன்று தொடங்கியது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் தேதி திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் 450 மாடுபிடி வீரர்களும், 550 காளைகளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்சி வருவாய் கோட்டாச்சியர் விஸ்வநாதன் உறுதிமொழி வாசிக்க, முன்னாள் எம்.பியும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.