நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த உதித்சூர்யா நேற்று குடும்பத்தோடு திருப்பதி மலை அடிவாரத்தில் கைது செய்யப்பட்டதனையடுத்து உதித்சூரியாவை குடும்பத்தோடு இரவு 2 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவத்தில் தனது மகனை டாக்டராக்கியே வேண்டும் என்ற ஆசையில் இப்படி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டோம். ஆள்மாறாட்டம் செய்தது உண்மைதான் என உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளது.
தனது மகன் உதித் சூர்யாவை சிறுவதில் இருந்தே மருத்துவராக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்த்து வந்தோம். ஆனால் நீட் தேர்வில் இரண்டு முறையும் தோற்றுவிட்டதால் தங்கள் கனவு பறிபோகிவிடுமோ எண்ணத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கு முன்பே அவனை மருத்துவராக்க சீனாவில் படிக்க வைத்தோம். ஆனால் அங்கு படிக்க முடியாமல் திரும்பி வந்ததால் இதுபோன்ற முடிவை எடுத்தோம். ஆனால் இது இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறியவில்லை என உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சிபிசிஐடி விசாரணையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .