தேனி தாலுகா அலுலகத்திற்கு புதிதாக 50 ஓட்டு மிஷின்கள் திடீரென இறக்கியதின் மூலம் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில், போராட்டத்தில் குதித்தனர். அதோடு இறக்குமதி செய்யப்பட்ட புது ஓட்டு மிஷின்களை திரும்ப கோவைக்கு எடுத்து செல்ல வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் எதிர்கட்சியினர் மாவட்ட கலைக்டர் பல்லவி பல்தேவ்விடம் புகார் கொடுத்தனர். அப்படி இருந்தும் தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வந்த ஓட்டு பெட்டிகளை திரும்ப அனுப்ப முடியாது என சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் தான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா திடீரென தமிழகம் முழுவதும் 13 பூத்துகளில் மறு வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். அதில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடுகபட்டி ஆகிய இரண்டு பூத்துகளில் வருகிற 19 ம்தேதி மறு வாக்கு பதிவு நடைபெறும் என அறிவித்தார்.
அதை தொடர்ந்து அரசியல் கட்சிகளும் அந்த இரண்டு ஊர்களில் மறு வாக்கு பதிவுக்கான பணிகளில் களம் இறங்க தயாராகி வருகிறார்கள். ஆனால் மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள பாலசமுத்திரம் மற்றும் வடுகபட்டியில் தேர்தல் சமயத்தில் வழக்கம் போல் ஓட்டு போட வந்த வாக்காள மக்களிடம் மாதிரி ஓட்டு போடும் மிஷின் வைத்து இருந்தனர்.
அந்த மிஷின்களில் வாக்காள மக்கள் பலர் ஓட்டு போட்டனர். அந்த பேலட்பேப்பரை கழட்டாமலேயே ரெகுலர் ஓட்டையும் பதிவு செய்ய வைத்து விட்டனர். இந்த விஷயம்
தேர்தல் அதிகாரியான கலெக்டர் பல்லவி காதுக்கு எட்டியதின் பேரில் தான் இந்த விஷயத்தை தலைமை தேர்தல் அலுவலகத்திற்கும் தெரிவித்து இருந்தார்.
அப்படி இருந்தும் அந்த இரண்டு ஊர்களுக்கு மறு தேர்தல் நடத்த உத்திரவு வரவில்லை. அது போல் கலெக்டர் பல்லவியும் அந்த இரண்டு ஊர்களில் தேர்தல் சமயத்தில் குளறுபடி இருந்தது. ஆனால் தேர்தல் நடத்த உத்திரவு இல்லை. அப்படி இருக்கும்போது எதற்காக 50 ஓட்டு மிஷின்கள் அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை என கூறியிருந்தார்.
அப்படி இருக்கும் போது திடீரென தலைமை தேர்தல் அதிகாரி இரண்டு ஊர்களுக்கு மறு வாக்கு பதிவு நடைபெறும் என அறிவித்து இருக்கிறார். அதோடு மறு வாக்கு பதிவு நடைபெற உள்ள பாலசமுத்திரம், வடுகபட்டியில் பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்க்கு ஐந்தாயிரம் ஓட்டுகளுக்குள் தான் இருக்கும்.
அதற்கு ஐந்து ஓட்டு மிஷின் இருந்தாலே போதும் அப்படி இருக்கும் போது 50 ஓட்டு மிஷின்களை கொண்டு வர தேவையில்லை. இதிலிருந்து பார்க்கும் ஓட்டு பெட்டிகளை மறைமுகமாக மாற்றுவதற்காகத் தான் இப்படி தேர்தல் ஆணையமும் மறு தேர்தலை அறிவித்து இருக்கிறது என்ற பேச்சு தேனி மாவட்டத்தில் உள்ள அரசியல்
வட்டாரத்தில் பேசப்பட்டும் வருகிறது.