தேசிய காசநோய் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் குறித்துக் கண்டறிந்து எக்ஸ்ரே எடுக்கும் வகையில் நடமாடும் வாகனம் அறிமுகப்படுத்தும் விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உட்பட அதிகாரிகள் கட்சிக்காரர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
அதன்பிறகு செய்தியளர்க்ளிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “காசநோய் ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனம் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று, நோய் உள்ளவர்களை கண்டறியும் வகையில் ஒரு நாளைக்கு சுமார் 200 எக்ஸ்ரே வரையில் எடுக்கும் வசதி கொண்டது. தேனி மாவட்டத்திற்கு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு மத்திய அமைச்சரிடம் இருந்து ஆணை வந்துள்ளது. பள்ளி செயல்படுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு தேனி மாவட்டத்தில் விரைவில் பள்ளி தொடங்கப்படும்.
சென்னையில் நடைபெற்ற ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாபேச்சுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர் கட்சித் தலைவர் தான் அது குறித்து தெரிவிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிக்கின்றோம் வரக்கூடிய தேர்தலில் 200 தொகுதிகள் நிச்சயம்” என்று தெரிவித்தார்.
மேலும் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். வாகனங்கள் செல்ல இன்று நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார் தெரிவித்தார். இனி எந்த தடையும் இன்றி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.