கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சமூக இடைவெளியைப் பயன்படுத்தி பள்ளிக்குச் சென்று வரும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 1- ஆம் தேதி முதல் 1- ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம், தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால் திறக்கவில்லை. இதனை தொடர்ந்து, நவம்பர் 15- ஆம் தேதி முதல் பள்ளிகள் 20 மாதம் கழித்து திறக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மானா சந்து தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கியும், அவர்களை கை தட்டி வரவேற்று உடல் வெப்பநிலை சரிபார்த்து கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி உள்ளிட்ட ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் இளங்கோவன், கல்வித்துறை அலுவலர்கள் என கலந்து கொண்டனர்.