புதுக்கோட்டை தங்கதேர் வெள்ளோட்டம்: அதிமுக அமைச்சர், திமுக எம்.எல்,ஏ க்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தங்க தேர் செய்யும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி முடிந்துள்ள நிலையில் இன்று மாலை வெள்ளோட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் கணேஷ் தலைமையில் மாலை தொடங்கிய வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மாசெ வைரமுத்து, மாஜி கார்த்திக் தொண்டைமான் ஆகியோருடன் திமுக எம்.எல்,ஏ க்கள் புதுக்கோட்டை பெரிண்ணன் அரசு, திருமயம் ரகுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடின்றி அதிமுக, திமுகவினர் கலந்து கொண்டது பொதுமக்களை வியக்கவைத்தது.
-இரா.பகத்சிங்