Skip to main content

நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்; விமானம் மூலம் சென்னை வருகை!

Published on 17/09/2024 | Edited on 17/09/2024
Tamils ​​ Arrival in Chennai by plane to trapped in landslides

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்திருந்தார். அதே போல், முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் தமிழர்களை மீட்க உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பேரில், நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் 10 பேர் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். மீதமுள்ள 20 பேர் ரயில் மூலம் நாளை சென்னை வரவுள்ளனர். 

சார்ந்த செய்திகள்